ஈழப்போரின் போது, ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருந்த போது, நீ என்ன பன்ன… என்னுடன் தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த என்று சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
வேண்டாம் சீமான்… வேண்டாம். இப்ப கூட நீங்க எடுத்து கொண்டிருக்கும் பாதை ரொம்ப தப்பாத்தான் எடுத்துக்கிட்டு இருக்க. எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறீயா. உனக்கு என்ன டா இருக்கிறது தகுதி. ஈழப்போரில் வந்து ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருக்கும் போது, என்னுடன் தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த. எல்லாம் வெளியில் வரத்தானே போகிறது. நாவை அடக்கிக்கோ சீமான். நாவை அடக்கிக்கோ.
ஒரு பெண்ணோட விஷயத்தில் கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் நடந்துக்கோ. எதிரில் மட்டும் நீ கிடைத்த உன் பற்களை தட்டி கொடுத்துவிடுவேன் சீமான். வேண்டாம் சீமான்… வேண்டாம் என்ன. ஒரு பெண்ணோட விஷயத்தில் ரொம்ப விளையாடிக்கிட்டு இருக்க. ரொம்ப சிரிச்சிக்கிட்டு இருக்க. இப்ப வந்து 6 பேர் மேல நான் வழக்கு கொடுத்து இருக்கேன். 6 பேருடன் நான் குடும்பம் நடத்தி இருக்கேனா. அப்புறம் எதுக்கு எனக்கு மார்ச் மாதத்தில் இருந்து காசு போட வந்த. விளையாடிக்கிட்டு இருக்கியா. மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கியா. என் காலில் இருக்கும் செருப்பை கழற்றி சாத்து சாத்துனு சாத்துவேன் சீமான். வேண்டாம் சீமான். கொஞ்சமாவது நீ மனச்சாட்சியுடன் பெண் என்று நடந்துக்கோ. இந்த மாதரி பொய்களை சொல்லிக்கிட்டு மக்களை ஏமாற்றாதே என இன்னும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.