பாஜகவுடன் நடிகர் விஜய் கூட்டணி..!! கடுப்பான புஸ்ஸி ஆனந்த்..!!
பாஜகவுடன் நடிகர் விஜய் கூட்டணி வைக்கப் போவதாக வெளியாகி வரும் செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆத்திரமாக ட்விட்..
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பல ஆண்டுகளாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். குழந்தைகளுக்கு தளபதி பயிலகம் என்ற பெயரில் இலவச கல்வியும் கொடுத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
தற்போது நடிகர் விஜய் அவரினர் ரசிகர் மன்றத்தோடு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கால் பதிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக ஒரு பேச்சு வெளியாகி தீயாக பரவி வருகிறது…
அதற்கான வேலைகளையும் நடிகர் விஜய் செய்து வருவதாகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் ஒரு தகவல்கள் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த பொய்யான தகவலை கேட்டு கடுப்பான தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தற்போது ட்விட் ஒன்றை சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் “அக்டோபர் 9ம் தேதி வெளியான தினமலர் நாளிதழில் தளபதி நடிகர் விஜய் அவரின் பெயரை கொண்டு இரண்டு அரசியல் கட்சிகளோடு தொடங்க இருப்பதாகவும்.., பல உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள இந்த செய்தி அப்பட்டமான பொய் எனவும் பதிவிட்டுள்ளார்…
இந்த செய்தியை பார்த்த தளபதி விஜய் அப்போதே மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்..,
மேலும் தளபதி விஜயின் ரசிகர்கள்.., தினமலர் நாளிதழை சரமாரியாக கமெண்ட் பாக்ஸ் பக்கத்தில் கிழித்து எடுத்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..