தேர்தலின்போது சொன்ன வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!
தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை திமுக தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக சென்னை ஐசிஎப்-யில் புதிதாக 500 குடியிருப்புகள் கட்டப்படுகின்றது.
ஏற்கனவே 496 குடியிருப்புகள் அகற்றப்பட்டு புதிதாக 500 குடியிருப்புகள் கட்டப்படும் நிலையில், இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஐசிஎபில் உள்ள காந்திநகர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி சரவணன், பிரியதர்ஷினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நாட்டிய பின்னர் காந்திநகர் பகுதி மக்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது குடியிருப்புகள் அமைகக்ப்பட்டு வருவதாக தெரிவித்தார்
Discussion about this post