விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் நேரில் அஞ்சலி…
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்த நடிகர்கள் சூர்யா, சென்றாயன், புகழ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது தரையில் சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்த அவர், பின்னர் கண்களை மூடி அழுதார்.
நேரில் அஞ்சலி செலுத்திய பின் பேசிய ‘குக் வித் கோமாளி’ மூலம் கவனம் பெற்ற நடிகர் புகழ், கேப்டன் விஜயகாந்தை போல், கே.கே.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் தினமும் மதிய உணவு அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
