நிலவில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம் என நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 வின்கலத்தை அனுப்பியுள்ளது. எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணி வெற்றிகரமாக ஆகஸ்ட் 17ம் தேதி மேற்கொண்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பதிவிட்டுள்ளது.
BREAKING NEWS:-
First picture coming from the Moon by #VikramLander Wowww #justasking pic.twitter.com/RNy7zmSp3G— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
இந்நிலையில், ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு , முக்கிய செய்தி நிலவில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என பதிவிட்டுள்ளார். இந்த நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உருவான சந்திரயான் – 3 விண்கலம் நிலவை அடைய உள்ள நிலையில் பிரகாஷ்ராஜின் இந்தச் செயல் ஒட்டுமொத்த விஞ்ஞானிகளையும், நாட்டு மக்களையும் அவமதிக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Discussion about this post