மகளிர் உரிமைத்தொகைக்காக 1.5கோடி குடும்ப தலைவிகள் பதிவு..! அரசின் புதிய முடிவு..?
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைதொகை திட்டத்திற்காக இதுவரை ஒரு கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற ஞாயிற்றுகிழமையுடன் நிறைவடைய இருப்பதால்.., விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசீலனைக்கு பிறகே யாருடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. யாருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிந்துவிடும்.
எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் வந்து இருப்பதால்.., மீண்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம் நடத்துவதற்கான தேவை இருக்காது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிலும் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டி இருந்தால்.., விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணிற்கு அது பற்றிய விவரமும் லிங்கும் குறுந் செய்தியாகா அனுப்பப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..