தொடரும் திமுகாவின் நீட் உண்ணாவிரத போராட்டம்..! ராகுல் காந்தி சொன்ன அந்த வாக்கு..?
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.., இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்., அப்பொழுது நீட் தேர்வால் இறந்த மாணவ மாணவிகள் பற்றிய வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை பார்த்த உதயநிதி உட்பட அனைவரும் கண்கலங்கியுள்ளனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி.., வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும், நீட் தேர்வும் ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருப்பதாக மேடையில் கூறினார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லையில் உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதே போல் விழுப்புரத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் பொன்முடி கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது.., அதுபற்றி பிரதமர் நரேந்திரமோடியோ.., அல்லது ஆளுநர் ஆர்.என்.ரவியோ எந்த வித நடவடிக்கையம் எடுக்கவில்லை இருந்தும்.., இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாட்டோம் என திமுக சார்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில், கலந்து கொண்ட திமுக எம்.பி திருச்சி சிவா பேசியுள்ளார்.
Discussion about this post