நடிகை நயன்தாரா வெகு நாளுக்குப் பிறகு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டராக வலம் வரும் நடிகை நயன்தாரா சமூக வலைதளங்களில் தலை காட்டாமல் இருந்து வருகிறார். நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தான் நயன்தாராவின் புகைப்படமும் அவர்களது குழந்தைகளின் புகைப்படமும் வெளியிடுவார்கள்.
நயன்தாராவின் அப்டேட்டுகளை பார்க்கவே அவரின் கணவர் விக்னேஷ் சிவன் பக்கத்தை ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயந்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதைத் தெரிந்துக்கொண்ட ரசிகர்கள் நயனை பாலோவ் செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நயன் போட்ட முதல் பதிவிலையே இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த தங்களது குழந்தைகளான உயிர் உலக்கின் முகத்தை உலகிற்கு காட்டியுள்ளனர்.