இது அல்லவா சூப்பர் அப்டேட்..! ஜவான் படம் ரிலீஸ் தேதி வெளியீடு..
அட்லி இயக்கி உள்ள “ஜவான்” படத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கௌரி கான் தயாரிப்பில், அனிருத் இசையில் வெளியாக இருக்கும் ஜவான் படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது.
நேற்று ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்து கொள்வார் என பலரும் எதிர்பாத்தனர், ஆனால் விழாவில் கலந்து கொள்ளை வில்லை என்றாலும் வீடியோவில் நேரலையில் வந்து பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜவான் படத்தில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு பல பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிலையில் அதன் டீசர் வெளியிட்ட சிறிது நேரத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. படத்தின் டீசர் பிரமாண்டமாகவும், த்ரில் ஆகவும் இருப்பதால் படமும் வெற்றி பெரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜவான் படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என இயக்குனர் அட்லீ கூறியுள்ளார்.