சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பட்டாசுகள் வெடிக்க தடை…
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2024 புத்தாண்டு தினத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் சென்னை கடற்கரைகளில் கூடுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதும் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் நாளை மாலை 7 மணி முதல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும், கடற்கரை ஓரங்களில் குதிரை படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் சாகசத்தை தடுக்கும் விதமாக 25 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி தேவை என தெரிவித்துள்ள காவல்துறை பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
