மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆயிரத்து 450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ராமர் கோவில், அடுத்த மாதம் 22-ந் தேதி திறக்கப்படுகிறது.
அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தையும், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
அயோத்தி ரயில் நிலையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்ரித் பாரத் ரயிலுக்குள் ஏறி, அதனை ஆய்வு செய்தார்.
மேலும், ரயிலில் இருந்த பள்ளி மாணவர்களோடு அவர் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு புதிய அதிவேக அம்ரித் பாரத் ரயில்களையும், 6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.