ரத்தன் டாடாவிற்கு உண்டான தாக்கம்..! ஆறுதலாக இருந்த பாட்டி..!
ரத்தன் டாடா மறைவுக்கு இந்திய வர்த்தக துறையை மட்டும் அல்லாமல் நாட்டு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு தற்போது இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரத்தன் டாடா அவர்கள் தன்னுடைய வாழ்க்கையின் பல சுவாரசியமான தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது குழந்தைப் பருவம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா வின் குழந்தை பருவம் பற்றி ஒரு சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க;
இந்த பேட்டியில் ரத்தன் டாடா மிகவும் முக்கியமாகப் பகிர்ந்தது, தனது தாய்-தந்தையின் விவாகரத்து தனது குழந்தைப் பருவத்தைப் பெரிதும் பாதித்ததாகக் கூறியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் விவாகரத்து என்பது இன்று போல் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று இல்லை என்பதால், அவரும் அவரது சகோதரரும் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.
தனது பாட்டி தான் அவர்களை வளர்த்து ஆளாக்கியதாகவும், தனது தாயின் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு பள்ளியில் தன்னை கேலி செய்ததாகவும் கூறியுள்ளார்.
ரத்தன் டாடா, ஜிம்மி டாடா மற்றும் நோயல் டாடா ஆகியோர் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்றாலும், அவர்களின் தாயார்கள் வெவ்வேறு என்றும் இது அவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கலான சூழ்நிலைகளை ஏற்படுத்தியதாகவும் இருப்பினும், அவரது பாட்டி அவர்களை ஒற்றுமையாக வைத்திருக்க முயன்றார்.
தனது தந்தையுடன் தனக்கு இருந்த மனக்கசப்பு குறித்தும் ரத்தன் டாடா பேசியுள்ள பதிவு;
அவருடைய தந்தையின் கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தன்னுடைய வாழ்க்கையின் பல முக்கிய முடிவுகளுக்கு தடையாக இருந்ததாக தெரிவித்தார். அவருடைய கல்வி, தொழில் போன்ற விஷயத்தில் தந்தையுடன் பல முறை கருத்து வேறுபாடு இருந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில், தன் வாழ்க்கையில் தன்னுடைய பாட்டிக்கு இருந்த முக்கியத்துவத்தை ரத்தன் டாடா எடுத்து கூறியுள்ளார். தன் பாட்டி அவருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்ததையும், தன் வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க உதவியதாகவும் தெரிவித்தார்.
ரத்தன் டாடா கூறி இந்த விஷயங்கள் அவரின் வாழ்க்கையில் பெரிதும் தாக்கத்தை அனுபவித்ததாக தெரிகிறது.