வேட்டையனை பார்த்த தமிழக வெற்றி கழகத் தலைவர்..!!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் தேவி திரையரங்கிற்கு வேட்டையன் படைத்தை பார்க்க வந்த காட்சிகள் பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்தில் பகத் பாசில், அமிதாப் பச்சன், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் மனசிலாயோ பாடல் படம் ரிலீஸுக்கு முன்பே பட்டித்தொட்டி எங்கும் பரவியது. இந்த பாடல் இல்லாத ரீல்ஸே இல்லை எனலாம். அது போல் இந்த பாடல் இல்லாமல் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் முடிவடையாது.
இன்று வெளியான வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் தியேட்டர் முன்பு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும், ரஜினியின் உருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சி சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் தனுஷுடன் இசையமைப்பாளர் அனிருத்தும் படம் பார்த்தனர்.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் வேட்டையன் படத்தை பார்த்தார்.
விஜய் அவர்கள் தலையில் தொப்பி அணிந்தும் முகத்தில் மாஸ்க் அணிந்துக் கொண்டு வந்தார். அவர் சினிமா பார்த்துவிட்டு காரில் ஏறிச் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.