தொடரும் மீட்பு பணி..!! ரத்து செய்யப்பட்ட 18 இரயில்கள்..? பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை..?
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கவரைப்பேட்டை அருகே சரக்கு இரயில் மீது எக்ஸ் பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக 18 இரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது…
நேற்று இரவு மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் நேற்று இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய நிலையில் கால தாமதமாக நேற்று இரவு 9.24 மணிக்கு வந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.. அந்த விபத்தில் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது..
மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கவரப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்..
இதுவரை இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.. ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
இந்த விபத்தின் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து இரயில் சேவைகளும் அனைத்தும் நேற்று இரவே நிறுத்தபட்டது.. ரத்து செய்யப்பட்ட 18 ரயில்கள் விபரம் கீழே குறிப் டப்பட்டுள்ளது..
* திருப்பதியில் இருந்து – புதுச்சேரி செல்லும் (ரயில் எண் 16111) இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* புதுச்சேரியில் இருந்து – திருப்பதி வந்தடையும் (ரயில் எண் 16112) இரயில் ரத்து செய்யப்பட்டது.
* சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16203) இரயில் ரத்து செய்யப்பட்டது.
* திருப்பதியில் – சென்னை சென்ட்ரல் வந்தடையும் திருப்பதி விரைவு வண்டி (ரயில் எண் 16204 ) ரத்து செய்யப்பட்டுள்ளது.
* சென்னை சென்ட்ரலில் இருந்து – திருப்பதி செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16053) ரத்து செய்யப்பட்டுள்ளது.
* திருப்பதியில் இருந்து – சென்னை சென்ட்ரல் வந்தடையும் திருப்பதி எக்ஸ்பிரஸ், (ரயில் எண் 16054) ரத்து செய்யப்பட்டுள்ளது.
* சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ், (ரயில் எண்.16057) ரத்து செய்யப்பட்டுள்ளது
* திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், (ரயில் எண்.16058) ரத்து செய்யப்பட்டுள்ளது..
மேலும் 12 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் சூலூர்பேட்டை, நெல்லூர், விஜயவாடா., கடப்பா – அரக்கோணம், டெல்லி, தமிழ்நாடு எக்ஸ் பிரஸ்., சார்மினார் எக்ஸ்பிரஸ் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.. இந்த இரயில்கள் ரத்து செய்யப்படிருப்பது பயணிகள் இடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..