அதிமுக ஆட்சி காலத்தில் இருந்ததை விட ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2023-24ஆம் ஆண்டுக்கான சித்தா ஆயுர்வேதா யுனானியா மற்றும் ஹோமியோபதி மருத்துவ பட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது…
சித்தா ஆயுர்வேதா ஆகிய படிப்புகளுக்கான கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் திருச்சியில் அமைக்கும் வகையாக திருச்சி பால்பண்ணை அருகில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரங்கத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாட்டில் உள்ள 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 786 இடங்களும்,
ஒரு அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மற்றும் 100 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 361 இடங்களிலும், ஒரு அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 46 இடங்களும். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஒன்றிலும் மற்றும் 11 தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள 822 இடங்கள் என 2064 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன.
வரும் 26ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு நடைபெறும். வரும் 27ஆம் தேதி முதல் 29 வரை அரசு ஒதுக்கீட்டிட இடங்கள் மற்றும் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். வரும் 31ஆம் தேதி அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும். மேலும் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறும். நவம்பர் மாதம் 20ஆம் தேதி மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும்.
இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5242. இதில் 472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 4 இறப்புகள் ஏற்ப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஓமந்தூராரில் உள்ள கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியபோது இரண்டு ஆண்டுகளில் வெரும் 500 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்றிருந்தனர். ஆனால் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துவங்கப்பட்டு சில மாதங்களை ஆன நிலையில் இன்று Op எண்ணிக்கை 858. இதுவரை. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 45 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதத்திற்குள் சென்னையில் 1021 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது என தெரிவித்தார்.
Discussion about this post