சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடம் முறைகேடு..! அலுவலர் மீது அதிரடி நடவடிக்கை..!
சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் தவறான முறைகேட்டில் ஈடுபட்டதாக குடியுரிமை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் இமிகிரேஷன் அலுவலராக பணியாற்றி வரும் சரவணன். மீது நடவடிக்கைகளை கண்காணித்ததில் அவர் முறைகேடு செய்துள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
அதவாது பயணிகளிடம் சரியான விசாரணை மேற்கொள்ளாமல்.., தவறான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, அதன் பெயரில் விமானநிலைய பரிசோதனை உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இமிகிரேஷன் அலுவலர் சரவணன் நடவடிக்கைகளை கண்காணித்ததில் அவர் முறைகேடு செய்துள்ளது உறுதியானது.
அதாவது சரவணன் போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்யும்போது அதனை சரியாக பரிசோதிக்காமல் அவர்களை பயணம் செய்ய வைப்பது, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவோருக்கு சரவணன் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலர் விமானத்தில் கடத்தி வரும் தங்கத்தை சரவணன் வாங்கி சுங்க சோதனை இல்லாமல் வெளியே எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. சஸ்பெண்ட் ஆன சரவணனிடம் இருந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..