மெய் சிலிர்க்க வைக்கும் சபரிமலை ஐயப்பன்…!! கார்த்திகை ஸ்பெஷல்..!!
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பன் அவர்களுக்கு தான் மிகவும் விஷேஷமான மாதம், இந்த மாதத்தில் பலரும் ஐயப்பன் அவர்களுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.. அப்படி விரதம் இருக்க வேண்டிய முறை பற்றி பார்ப்பதற்கு முன் ஐயப்பன் பிறந்த கதையை பற்றி பார்க்கலாம்…
தத்தாயத்ரி என்ற ரிஷி எப்போதூம் தவம் இருப்பது, இறைவன் வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்., அப்போது அவர் மனைவி லலிதா, தத்தாயத்ரியரிடம் நம்மில் யார் பெரியவர்கள் எனக் கேட்டுள்ளார்.. அதற்கு தத்தாயத்ரி நான் தான் பெரியவர் எனக்கூறி., அவரது மனைவியை மகிஷி (எருமை) என்ற வார்த்தையை கூறியுள்ளார்.
மேலும் நீ மகிஷியாக பிறப்பாய் என்றும், சிவன் விஷ்ணுவிற்கு பிறக்கும் மகனால் மரணம் உண்டாகுன் என்றும் சாபம் கொடுக்கிறார்..
இதனால் லலிதா மனித பெண் உடலோடு, எருமை தலையோடு மகிஷியாக பிறக்கிறார்.. அப்போது மகிஷி பிரம்மாவை நோக்கி விரதம் இருந்து தன்னை எந்த ஆண் மகனாலும் அளிக்க முடியாத வரத்தை பெறுகிறார்..
அதன் பின் மகிஷி அங்கிருந்த மக்களை துண் புரித்தி, கொடுமைகள் செய்கிறாள், இதனை தாங்கி கொள்ள முடியாத மக்கள் சிவனை நோக்கி முறையிட்டனர்.. அதன் பின் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சிவனக்கு ஒரு ஆண் மகனை பெற்று எடுக்கிறார்..
அப்போது குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.. அப்போது கேரளாவை சேர்ந்த பந்தள ராசா என்ற மன்னர் குழந்தை இல்லாமல் தவித்து வந்தநிலையில் காட்டில் பிறந்த ஐயப்பனை கண்டதும் தத்தெடுத்து செல்கிறார்..
கழுத்தில் மணியோடு பிறந்ததால் இவருக்கு மணிகண்டன் என பெயர் வைக்கிறார்.., அதன் பின்னர் பந்தளராசா அரண்மனைக்கு ஐயப்பன் வந்த பின் அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதோடு, அவரின் சொத்துக்களும் அதிகரிக்கிறது.
அதிஷ்டமான மகன் பிறந்திருக்கிறன் என எண்ணிய பந்தள ராசா மணிகண்டனுக்கு அவரது 18வது வயதில் பட்டாபிஷேகம் செய்ய விரும்புகிறார்..
இதை அறிந்த அமைச்சர் தனக்கு கிடைக்க வேண்டிய பட்டாபிஷேகம் சிறு பையனுக்கா என எண்ணி ஒரு சூழ்ச்சி செய்கிறார்.. அதாவது ராணியிடம் சென்று உங்களுக்கு பிறந்த குழந்தைக்கு செய்யாமல் தத்தெடுத்த மகனுக்கு செய்யலாமா அவனை நீங்கள் காட்டுக்கு அனுப்பி கொன்று விடுங்கள் என சொல்கிறார்..
இதை யோசித்த ராணி உடல்நலம் சரியில்லாததை போல நடித்து மகன் மணிகண்டனை அழைத்து புலிப்பால் கொடுத்தால் மட்டுமே பிழைக்க முடியும் என வைத்தியார் வைத்து சொல்கிறார்..
தாயின் சூழ்ச்சியை அறியாத மணிகண்டன் காட்டிற்கு செல்கிறார்.. அப்போது மகிஷி மக்களை துன்புறுத்துவதை பார்த்து., மகிஷி மீது ஏறி நடனம் ஆடுகிறார். அப்போது மகிஷி அவதாரம் நீங்கி அவள் பெண்ணாக அவதரிக்கிறாள்.
இதனை பார்த்த மகிஷி ஐயப்பனை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுவதாக கூறுகிறாள்.. ஆனால் மணிகண்டன் தன்னை கன்னி சாமிகள் எப்போது வணங்குவதை நிறுத்துகிறார்களோ அப்போதே தான் திருமணம் செய்துக்கொள்வதாக கூறுகிறார்..
அதே சமயம் தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள், அவர்களின் வேண்டுதலை நீ நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறார்..
அதன் பின் தாயின் வைத்தியத்திற்காக புலிப்பால் கொண்டு வர செல்கிறார்.. ஆனால் அப்போது ஒரு புலிக்கூட்டம் அவரை நோக்கி வருகிறது..
இதை பார்த்த மக்கள் அச்சம் அடைந்த போது மணிகண்டன்., நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனக்கூறி புலிப்பால் கறந்து, அந்த புலி மீதே பந்தள ராஜாவின் அரண்மனை நோக்கி செல்கிறார்.
இதை பார்த்து எல்லோரும் ஆச்சரியம் அடைய, அப்போதே எல்லோரும் இவர் தெய்வக்குழந்தை என உணரு கின்றனர்.. அதன் பின்னர் பந்தளராஜா மணிகண்டனுக்கு கோவில் கட்ட ஆசைப்பட்டு ஐயப்பனிடம் கேட்கிறார்.. அவரோ ஒரு அம்பை எடுத்து இது எங்கே போய் விழுகிறதோ, அங்கே எனக்கு கோவில் எழுப்புங்கள் என சொல்கிறார்..
அப்படி அந்த அம்பு விழுந்த இடம் தான் சபரிமலை.. தன் தாயிக்காக புலிப்பால் கொண்டு வருவதற்காக காட்டுக்கு செல்லும் வழியில் உண்பதற்காக நெய் தேங்காய், அவல், அரிசி போன்றவற்றை கொடுத்து அனுப்பினார். அந்த முறையையே தற்போது நாம் இருமுடி பைகளில் எடுத்து செல்கிறோம்…