பழனி பெரியாவுடையார் அபிஷேகம்
பழனி கோதை மங்களம் பெரியாவுடையார் கோயிலில் ஆண்டு தோறும், வருடாபிஷேக பூஜை நடைபெறும். பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் சண்முக நதிக்கரையில் பெரியாவுடையார் கோவில் அமைந்துள்ளது.
இப்புனித தளத்தில் இன்று காலை 108 வலம்புரி சங்கில் புனித நீரை நிரப்பி , கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடத்தினர். இந்த பூஜையை தொடர்ந்து தீப ஆராதனை நடைபெற்றுள்ளது.
ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு.., பெரியாவுடையாரின் ஆசி பெற்று சென்றுள்ளனர். பின் பழனி மலை முருகருக்கு ம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது விடுமுறை காலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post