அதிரடியாக குறைந்த ஆவின் நெய் விலை..!!
ஆடி மாதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 100 மிலி நெய் விலையில் 10ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது..
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
ஆவின் நிர்வாகத்தில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், தயிர், மோர் போன்ற பல்வேறு பொருட்களின் விலை விழா காலங்களில் குறைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு 100 மிலி நெய் விலையில் 10ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 85ரூபாய்க்கு விற்பனையான ஆவின் 100 மி.லி நெய் விலை 75ரூபாய் யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்டம்பர் 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..