முகம் தங்கம் போல ஜொலிக்க இது போதுமே..!!
நமது சருமத்தை ஜொலிக்க வைக்க மார்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான முறையை பின்பற்றினாலே போதும். இதைத்தான் நம் முன்னோர்களும் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட பெருமை இந்த ஆவாரம் பூவிற்கு உண்டு.
ஆவாரம் பூவில் ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதை நம் சருமத்திற்கு பயன்படுத்தினாலே முகம் முழுக்க ஜொலிப்பதை பார்க்கலாம்.
ஆவாரம் பூவை சருமத்தில் பயன்படுத்தும்போது எந்தவித தீமைகளையும் அது ஏற்படுத்தாது. இதனால் தான் இந்த பூவை அருமையை தெரிந்தவர்கள் இதை விடவே மாட்டார்கள்.
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு சூடான நீரில் கலந்து சுவைக்கு தேன் கலந்து பருகி வரலாம்.
ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து கூட்டு போல சமைத்து சாப்பிட இது சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.
ஆவாரம் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து தலைக்கு தடவி வர கூந்தலுக்கு நல்ல வளர்ச்சி அளிக்கும்.
ஆவாரம் பூவை பேஸ்பேக்காக தயாரித்து சருமத்தில் தடவி வர முகத்திற்கு நல்ல பொலிவை தரும். இளமையான தோற்றத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
ஆவாரம் பூவானது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகமாக கிடைக்கும், அந்த சமயங்களில் ஆவாரம் பூவை சேகரித்துக் கொண்டு நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு பொடியாக்கி சருமத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி உங்களுக்கு பூ கிடைக்கவில்லை என்றாலும் கவலை வேண்டாம், பக்கத்தில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் ஆவாரம் பூவானது இருக்கும் வாங்கி பயன்படுத்தலாம்.