50 லட்சம் ரூபாயுடன் டேக்கா கொடுத்த ஆசாமி..!! போலீசில் சிக்கியது எப்படி..!!
வாணியம்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடியில் ஈடுப்பட்டு குடும்பத்துடன் தலைமறைவான நபர் கைதுவாணியம்பாடி நகர காவல்துறையினர் நடவடிக்கை..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சையத்பாஷா. இவர் அதேப்பகுதியில் ஏலச்சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார்.. இவரிடம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இவரிடம் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி சையத்பாஷா பொதுமக்கள்ளிடம் கட்டிய ஏலச்சீட்டு பணம் 50 லட்சம் ரூபாயை மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.. சையத் பாஷாவிடம் ஏலச்சீட்டு பணம் கட்டி பின் ஏமாற்றத்தை உணர்ந்த மக்கள் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில், இந்த பண மோசடி சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, குடும்பத்துடன் தலைமறைவான சையத்பாஷாவை தேடி வந்துள்ளனர்.., மேலும் அவர் உபயோகித்த செல்போன் எண் மற்றும் மொபைல் எண்ணை வைத்து டிராக் செய்துள்ளனர்.. பல நாட்களாக சுவீட்ச் ஆபில் இருந்த சையது எண் நேற்று இரவு ஆண் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சையத் பாட்சாவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..