ஸ்ரீஎல்லமுத்துமாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா..!! 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே எடமணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஎல்லமுத்து அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள எடமணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீஎல்லைமுத்துமாரி அம்மன் ஆலயத்தின் நான்காம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஒரு வார காலமாக பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் இருந்து அம்மனுக்கு தினமும் அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபட்டனர். தீமிதி திருவிழா நடைபெறும் நாளான நேற்று இரவு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிராம தேவதை எல்லையில் இருந்து தீச்சட்டி ஏந்தி கரகம் ஏற்று ஊர்வலமாக வந்து தீமிதி திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேரத்தி கடனை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அஇஅதிமுக கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை எடமணி கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.
அதேபோன்று எடமணி நாடார் கிராமத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு ஆடிமாத விழாவில் அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் பழவேற்காடு ஊராட்சிமன்ற தலைவர் மாலதி சரவணன் திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் தர்மதுரை தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..