பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் , பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து உள்ளது. பெருபான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் 86 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.