ஆடி செவ்வாய் விரதம்..! வீட்டில் பணம் வரவு பெறுக..! கன்னி பெண்களுக்கு திருமணம் ஆக..!
கடந்த மாதம் முழுவதும் எந்த நாளில் எந்த தெய்வத்தை வலிபடாலம் என்பது பற்றி பார்த்து இருப்போம்.. ஆனால் இது ஆடி மாதம்.., இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு தெய்வத்தின் சிறப்பு வழிபாடு மற்றும் என்ன நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
ஆடி மாதம் பிறந்த இரண்டாவது நாள்.., இன்று ஆடி செவ்வாய். ஆடி மாதம் என்றாலே அம்மன் களுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்த நாளில் சில நாட்கள் மிகவும் முக்கியமான ஒன்று.., அந்த நாளில் சில விரதங்கள்.., சில வழிபாடுகள் இருந்து நீங்கள் வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
ஆடி செவ்வாய் மிக முக்கியமான ஒன்று இந்த நாளில் கன்னி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் இந்த விரதம் இருந்தால், கன்னி பெண்களுக்கு நல்ல குணமுடைய கணவரும், சுமங்கலி பெண்களுக்கு தீர்க்க சுமங்கலியாக இருக்க கூடிய பாக்கியமும் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் வரும் முதல் செவ்வாய் அன்று வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி.., மாலை நேரத்தில் ஒரு தேங்காய் எடுத்து தேங்காய் முழுவதும் மஞ்சள் பூசி அம்மன் போல அலங்கரிக்க வேண்டும். அலங்கரித்து அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும்.
பூஜை செய்து முடித்த பின் அம்மனுக்கு பெண், பெண்கள் அனைவரும் ஒன்று கூடி உப்பில்லா கொழுக்கட்டை செய்ய வேண்டும்.., இந்த பூஜை ஆரமிக்கும் நொடியில் இருந்து பூஜை செய்து முடிக்கும் வரை மற்றும் கொழுக்கட்டை செய்து முடிக்கும் வரை ஆண்கள் அதை பார்க்க கூடாது.
அப்படி பார்த்தல் இந்த பூஜைக்கு பலன் இல்லை.., வயதில் மூத்த பெண்கள் அந்த தேங்காயை அம்மன் வடிவில் தோற்று விக்க வேண்டும். அதாவது தேங்காய் முழுவதும் மஞ்சள் பூசி, கண் மையினால் அம்மனுக்கு கண் புருவம் வரைய வேண்டும், குங்குமத்தால் நெற்றி பொட்டு வைக்க வேண்டும். ஒரு சொம்பு அல்லது குடத்தின் மேல் அந்த தேங்காயை நிறுத்தி அம்மனுக்கு தங்கம் அணிய வேண்டும்.
நிற்க வைக்கப்பட்டிருக்கும் குடம் அல்லது சொம்பில் கலசம் தண்ணீர் போல செய்து அதை சுற்றி புளியமரத்து இலை அல்லது பும்பை இலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வீட்டில் மூத்த பெண் அல்லது வயதான பெண்கள் ஒரு கதை சொல்லுவார்கள்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..,
– லோகேஸ்வரி.வெ