ஆடி 2வது அமாவாசை, முன்னோர்களின் ஆசி கிடைக்க இந்த வழிபாடு அவசியம்..
அமாவாசை : சூரியன் (அப்பா ), சந்திரன் (அம்மா) இருவரும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதையே அமாவாசை என்கிறோம். அமாவாசையில் மிகவும் முக்கியமான அமாவாசை ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி அமாவாசை.
ஆடி மாதத்தில் வந்த முதல் அமாவாசை எந்த அளவிற்கு விஷேசம் இருக்கிறதோ. அதே அளவிற்கு இந்த அமாவாசையும் சிறப்பு. ஆடி மாதத்தில் வந்து இருக்கும் இரண்டாவது அமாவாசை “தர்ப்பணம்” அமாவாசை.
இந்த அமாவாசை நாளில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய அமாவாசை. ஆடி முதல் அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் இருந்தவர்கள்.. இந்த அமாவாசையில் கொடுக்கலாம்.
தர்ப்பணம் கொடுக்கும் முன் கோவில்களில் நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் இருந்து தான் “தர்ப்பணம்” கொடுக்க வேண்டும்.
காலையில் 6 மணி அளவில் கோவிலுக்கு சென்று பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்து இறந்தவர்களுக்கு இந்த வழிபாட்டை செய்து அவர்களின் ஆசியை பெற்றுக்கொள்ளலாம்.
வீட்டிற்கு வந்து அவர்களின் புகைப்படம் முன்.., தீபன் ஏற்றி அவர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டு வழிபடலாம்.
முக்கியமாக காகத்திற்கு எள் சாப்பாடு உருண்டை வைக்கலாம், 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். இந்த வழிபாட்டை செய்தால் வீட்டில் மாண்ட தெய்வத்தின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்தக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post