20ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்..! கடைசியாக போட்ட ஸ்கெட்ச்..? சிக்கியது எப்படி..?
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மணி என்ற நபர் பேக்கரி நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயது ஆன நிலையில் திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு “அம்பி டேட் தி தமிழ் வே” என்ற ஆப் மூலம் “ஜோதி” என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
3 மாதங்கள் பழகிய பின் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மணியின் குடும்பத்தாரும் அந்த பெண்ணை ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இருக்க கடந்த 3 மாதங்களாக இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சிலவாரமாக இந்த பெண்ணின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் அந்த பெண்ணின் ஆதார் அட்டை கிடைத்துள்ளது.. அதனை கண்ட மணியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் அவரது வயது மணியை விட 5 வயது அதிகமாக இருந்துள்ளது.. கணவர் பெயரும் குறிப்பிட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த மணியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது பெரும் பேர் அதிர்ச்சி காத்திருந்தது..
ஜோதிக்கு 10 வருடங்களுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் கல்யாணம் முடிந்துள்ளது.. ஒரு குழந்தையும் இருப்பதும் தெரிய வந்தது. இதற்கு பிறகு, கரூரில் போலீஸ்காரரை திருமணம் செய்துள்ளார்.. பிறகு, மதுரையில் இன்னொரு போலீஸ்காரரை திருமணம் திருமணம் செய்துள்ளார்.. அடுத்ததாக, கரூரில் ஒரு நிதி நிறுவன அதிபரை திருமணம் செய்துள்ளர்.. இப்படியே மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நபர்களை இப்பெண் திருமணம் செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த ஜோதி எப்போதும் 35வயதுக்கு மேற்பட்ட ஆண்களையே திருமணம் செய்து கொண்டு 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு பின் அவர்களுடன் சண்டை போட்டுகொண்டு வேறு இடத்திற்கு சென்று விடுவாராம் இப்படியே போக இன்று வசமாக சிக்கியுள்ளார். தற்போது ஜோதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ