ADVERTISEMENT
பேருந்தின் படியில் தொங்கியவாறு மாணவர்கள் கைபேசியில் பேசியபடி பயணம்
திருவண்ணாமலையில், பேருந்தின் படியில் தொங்கியவாறு மாணவர்கள் கைபேசியில் பேசியபடி பயணம் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கத்திலிருந்து திருவண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் படியில் நின்று கைபேசியில் பேசியபடியே சாகசம் செய்த வீடியோ பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்று சாகச செயல்களில் ஈடுபட்டு வரும் மாணவர்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் எச்சரித்தாலும், அவர்கள் மீது அவதூறான வார்த்தைகளை பிரயோகிப்பதும், சிலர் தாக்குதலில் ஈடுபடுவதும் ஆங்காங்கே நடைபெறுவதால், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவிர்த்து வருகின்றனர்.
இந்த ஆபத்தான பயணங்களை தடுக்க அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)