திருப்பத்தூர் – 1 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாட்டில்கள் காவல்துறையினரால் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு பகுதியில் 1 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு சகாதேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவர், வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர், கலையரசன் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
மேலும், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கலையரசனை தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.