திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த நிலையில் நடைப்பாதையின் போது பக்தர்கள் குழுவாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அலிபிரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு நடைபாதை வழியாக செல்ல தடை விதித்துள்ளது. ஆகஸ்ட் 11 இரவு சிறுத்தை தாக்கியதில் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார்.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவார்கள். காட் ரோடுகளில் மாலை 6 மணிக்குள் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் , அலிபிரி பாதையில் பக்தர்கள் குழுவாக பாதுக்காப்புடம் நடைப்பயணம் மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/reel/947745592954556?mibextid=6AJuK9