நாங்குநேரியில் மாணவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குழு ஆய்வு.
நாங்குநேரியில் மாணவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 9ம் தேதி நாங்குநேரியில் பள்ளி மாணவர்களான சின்னத்துரை சந்திரா செல்வி ஆகியோர் சக மாணவர்களால் வெட்டு காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ஒட்டி சம்பவத்தை பார்த்த சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணன் என்பவரும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி பள்ளி மாணவர்கள் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து நெல்லை இளஞ்சிறார் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினரும் பல்வேறு தலித்திய பாதுகாப்பு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து நாங்குநேரி பெருந்தெருவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் முன்னாள் எம்பி லிங்கம், நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ் வி கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் உதயக்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட குழு செயலாளர் லட்சுமணன் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின் முருகானந்தம், முத்துலட்சுமி, சுகுமார், முருகன், பாபு ஆகியோர் அடங்கிய குழு இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி ஆகியோரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்.
அதனை தொடர்ந்து நாங்குநேரி வந்த அக்குழு படுகாயம் அடைந்த சின்ன துறையின் வீட்டை பார்வையிட்டனர். அதன் பின்பு அங்கு உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் இதுகுறித்து வீரபாண்டியன் கூறுகையில் நவீன எலக்ட்ரானிக் உலகில் அடி எடுத்து வைக்கும் தமிழ் சமூகத்தில் ஜாதிய வேறுபாடுகள் ஏற்புடையதல்ல என்றார். இதனை அடுத்து இக்குழுவினர் வள்ளியூர் கனகார்டியா அரசு பள்ளிக்கு சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.