ரொம்பவே சிம்பிளா டேஸ்டியான ஸ்வீட் லட்டு…!!
இனிப்பு பலகாரம் என்றாலே பலருக்கும் படிக்கும் ஆனா அதை செய்வதற்காக எடுக்கபடும் நேரத்தை பார்க்கும் போது தான் இதை செய்யனுமா என யோசிக்க தோன்றும்.., ஆனா இந்த லட்டு ரெசிபியை நீங்க 20 நிமிடத்தில் செய்யலாம்…
அவல் – 2 கப்
பொடித்த வெல்லம் – 3/4 கப்
கொப்பரை துருவல் – 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
பாதாம் – 10
திராட்சை – 10
நெய் – 4 டீஸ்பூன்
அடி கனமான வாணலியில் அவலை போட்டு, மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுத்து கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள், பின் மிக்சியில் போட்டு பொடியாக்குங்கள். இந்த பொடியுடன், வெல்லம், கொப்பரை துருவல், ஏலக்காயை போடுங்கள். இந்த கலவையை மிக்சியில் போட்டு பொடியாக்க வேண்டும்.
இந்த கலவை ரவை போன்று ஆகும். வாணலியை, அடுப்பில் வைத்து நெய் ஊற்றுங்கள். பின்னர் சூடானதும் முந்திரி, பாதாம், திராட்சையை போட்டு வறுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதை மாவு கலவையுடன் சேர்ந்து, நன்றாக கலக்குங்கள் தேவையான அளவில் உருண்டை பிடித்து கொள்ளுங்கள். இதை செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்குனு பதிவு செய்யுங்கள் .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..