காவிரி விவகாரத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்படும்..!! முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உறுதி..!!
காவிரி விவகாரத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு போட்டியாக கர்நாடக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், விவசாயி நலனை பாதுகாக்க கர்நாடகாவில் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறினார்.
இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதில் 13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..