முகம் அழகாக இருக்க ஒரு சீக்ரட்..!!
முகத்தை பராமரிக்க நேரம் இல்லாதவர்களுக்கு இந்த ஒரு கிரிம் போதும் .
முகத்தை பராமரிக்க நேரம் இல்லாதவர்கள் கூட இந்த ஒரு கிரீமை இரவு படுக்கப் போவதற்கு முன்பாக பயன்படுத்தினால் முகம் என்றும் இளமையாகவும், வெண்மையாகவும் மாறிவிடும். நாம் எல்லோருமே அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
அதிலும் குறிப்பாக முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆதலால் தான் இன்றைய காலகட்டத்தில் வியாபார நோக்கத்தில் பல ஃபேஸ் க்ரீம்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. அவ்வாறு விற்கும் கிரீம்களை நாம் பயன்படுத்தினால் அதில் இருக்கும் கெமிக்கல்களால் நம் முகத்திற்கு பாதிப்புகளை ஏற்படும்.
இதை தவிர்த்து விட்டு நாமே நம் வீட்டில் கிரீம் தயார் செய்து பயன்படுத்தினால் அதனால் நமக்கு நன்மைகள் பல கிடைக்கும்.
இன்றைய பரபரப்பான சூழலில் உடல் ஆரோக்கியத்திற்கும், முகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்காக நேரம் செலவிடுவது மிகவும் கடினமாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் வீட்டு வேலை பார்ப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அதேசமயம் அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருமுறை இந்த கிரீமை தயார் செய்து வைத்துக் கொண்டு இரவு படுக்கப் போகும்போது போட்டாலே முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி முகம் அழகாகவும், பொலிவுடனும் திகழும்.நைட் கிரீம் யார் செய்யும் முறையை பார்க்கலாம் .
நைட் கிரீம் யார் செய்யும் முறை:
* ஈரம் இல்லாத ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதில் கால் ஸ்பூன் அளவிற்கு அதிமதுர பொடியை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு வேப்ப இலை பொடியை சேர்க்க வேண்டும்.
* அடுத்ததாக அதில் கால் ஸ்பூன் ரோஜா இதழ் பொடியை சேர்க்க வேண்டும்.
* இவை மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.
* இப்பொழுது இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்.
* பிறகு இதில் நான்கு சொட்டு அளவிற்கு விட்டமின் ஈ ஆயிலை சேர்க்க வேண்டும்.
* இவை அனைத்தையும் நன்றாக கிளற வேண்டும்.
* இப்படி செய்தால் இது ஒரு கிரீம் போல தயாராகி விடும்.
* இந்த கிரீமை ஒரு கண்டைனரில் போட்டு வைத்து விட வேண்டும்.
* இந்த கிரீமை நாம் வெளியில் வைத்து பயன்படுத்தும் பொழுது 10 நாட்கள் வரையும், ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் 20 நாட்கள் வரையும் நன்றாக இருக்கும்.
* இரவு படுக்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த க்ரீமை முகத்தில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும்.
* அவ்வளவுதான் இவ்வாறு நாம் தினமும் தொடர்ந்து செய்து வர நம் முகத்தில் இருக்கக்கூடிய மாசு மருக்கள் அனைத்தும் நீங்கி, வெயிலினால் ஏற்பட்ட கருமைகளும் நீங்கி, முகம் வெண்மையாகவும் அதே சமயம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.
மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த மூன்று பொடிகளையும் பயன்படுத்தி நைட் க்ரீமை தயார் செய்து உபயோகப்படுத்தி நம் முகத்தை அழகாக பராமரித்து கொள்வோம்.
-நிரோஷா மணிகண்டன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..