முயற்சிக்கு கிடைச்ச பரிசு.. குட்டி ஸ்டோரி-45
கடலின் அருகாமையில் மீனவக்குடும்பம் எல்லாரும் வசித்து வருகிறார்கள். அங்கு ஒரு வயசான தாத்தா இருந்தாரு, அவரு மிகவும் கடினமாக உழைப்பவர். ஒரு நாள்கூட வீட்டில் இருக்காமல் தினமும் மீன் புடிப்பதற்கு செல்வார்.
ஆனால் அவருக்கு மீன் கிடைக்கவே இல்லை, ஒருநாள் பாதிதூரம் சென்று திரும்பி வந்தார். மறுநாளும் சென்றார் அன்றிக்கும் எதும் கிடைக்காமல் வந்தார். அதை பார்த்த மக்கள் தினமும் இப்படி சென்று வருவதற்கு பதில் வயசான காலத்தில் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்காமல் ஏன் தினமும் ஓடி கொண்டு இருக்கிறாய் என்று கேட்டனர்.
அதற்கு அந்த தாத்தா எனக்கு என்னால் முடிந்த வரைக்கும் தினமும் முயற்சித்து கொண்டு இருப்பேன். அதற்கான வெற்றி ஒருநாள் கண்டிப்பாக வரும் என்று நான் தினமும் ஓடிக்கொண்டு இருக்கிறேன்,
நீ கேட்குற மாதிரி தெரியல உன்கிட்ட பேசி எனக்கு நேரம் கழிந்தது தான் மிச்சம் என்று கூறிவிட்டு சென்றார்கள்.
மறுநாள் விடிந்ததும் வழக்கம்போல் மீன்வலை எடுத்து கொண்டு கடலுக்கு கிளம்பினார் அவருடைய பேரன் தாத்தா நானும் உங்களுடன் வரேன் என்று கூறினான். தாத்தா வர நாட்கள் ஆகும் நீ இங்கயே இருப்பா என்று கூறினார்.
இல்லை நான் உங்களுடன் வரேன் என்று கூறினான் அவனையும் கூட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றனர். இரண்டு நாட்கள் பயணித்தனர் ஆனால் ஒரு மீன் கூட மாட்டவில்லை மூன்றாவது நாள் வலை வீசும் பொழுது பெரிதாக எதோ மாட்டியது, என்னவென்று பார்த்தால் திமிங்கலம். தாத்தாவிற்கு சந்தோசம் தாங்காமல் பேரனிடம் மகிழ்ச்சியோடு கூறினார்.
இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வோம் என்று கூறினார். வீட்டிற்கு செல்வதற்கு 2 நாள் ஆகும் கடினமாக வேகமாக கடலில் இருந்து படகில் கிளம்பினார்.., அது திமிங்கலம் என்பதால் வலையை கிழித்து வெளியே வர பார்க்கும் பொழுது அதற்கு அடிபட்டு ரத்தம் முழுவதும் கடலில் கலந்து அந்த வாசனையில் மிதி திமிங்கலம் அதை சாப்பிடுவதற்கு வந்தது.
அதுங்களுக்கு வலையில் மாட்டிக்கொண்டது அதை எல்லாம் கொண்டு வந்து கரையே வந்து சேர்ந்தனர், தாத்தாவும் பேரனும். அதை பார்ப்பதற்கு மக்கள் எல்லாரும் வந்தனர். தாத்தா சொன்னது மாதிரி அவரு பெரிய மீன்களை கொண்டு வந்துட்டாரே என்று ஆசிரியப்பட்டாங்க.
இதில் இருந்து என்ன தெரிகிறது..? முறியற்சி செய்வது என்றைக்கும் வீண்போகாது வயசு வித்தியாசம் ஏதும் இல்லை முயற்சி ஒன்றே ஒருவனை வெற்றி அடைய செய்யும் நீங்களும் உங்கள் முயற்சியை கைவிடாமல் செய்து கொண்டு இருங்கள் ஒருநாள் இல்லை என்றாலும் இன்னொருநாள் அதற்கான வெற்றி கிடைக்கும்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..