பேருந்தில் சென்ற நபர் தவறி விழுந்து விபத்து..!! சென்னையில் நடந்த சோகம்..!!
இன்று காலை பள்ளிகள் திறப்பு காரணமாக அனைத்து பேருந்துக்களும் கூட்டமாக ஆரமித்துவிட்டது.. சில பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.. எனவே வரும் பேருந்துகள் கூட்டம் என்றாலும் மக்கள் ஏறிதானே ஆக வேண்டும்.
அதுவும் சென்னை பிராட்வேயில் இருந்து மயிலாப்பூர் செல்லும் வழியே மெட்ரோவும் கிடையாது. வெறும் 21, 21c மற்றும் 21G மட்டும் தான் செல்லும். சென்னை சென்ட்ரல் பேருந்து நிறுத்தம் வந்தால் 1A பேருந்து அந்த வழியே செல்லும்.
குறைவான பேருந்துகள் இருப்பதால்.., கூட்டம் என்றால் மக்கள் ஏறியே ஆகவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.. அப்படி கூட்டத்துடன் பேருந்து பிராட்வேயில் இருந்து கிளம்பிது, சென்னை சென்ட்ரலில் இதற்கு முன் சென்ற பேருந்து ப்ரேக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டதால் , போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து காரணமாக பேருந்துகள் திருப்பிவிடப் பட்டன, இதற்கு முன் பிரேக்டவுன் ஆகியிருந்த பேருந்தில் இருந்த பயணிகளும் 21ல் வந்து ஏறினர். கூட்டம் அதிகமானதால்.. பேருந்து மெதுவாக சென்றது.. உள்ளே நிற்பதற்கு இடம் இல்லை என்பதால் பலரும் பேருந்தில் தொங்கி கொண்டு வந்தனர்.
வாகனங்கள் அதிகம் செல்லாத ரோடு என்பதால்.., ஓட்டுநர் வேகத்தை அதிகரிக்க பேருந்தின் படிக்கட்டில் தொங்கி கொண்டுவந்த கல்லூரி மாணவர் தவறி விழுந்தார்.., அவர் தவறி விழுந்தது கூட தெரியாமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டிக் கொண்டு செல்ல, உடன் இருந்தவர்கள் கூச்சல் இட்ட பிறகே பேருந்தை நிறுத்தினார்.
பின் அவருக்கு தேவையான முதல் உதவி அளிக்கப்பட்டு.., மீண்டும் பேருந்தை ஓட்ட தொடங்கினார். நீண்ட நேரமாக பேருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தது.., வேறு எந்த பேருந்தும் பின்னே வராததால்.., மக்களால் வேறு பேருந்தில் செல்லவும் முடியவில்லை..
தவறி விழுந்த மாணவருக்கு சிறு காயங்களுடன் தப்பியதால்.. உடன் இருந்தவர்களே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
“நீங்கள் பேருந்தில் செல்லும் பொழுது இதுபோன்ற விபத்துக்கள் நேர்ந்தால், “112” என்ற உதவி எண்ணை அழைக்க மறுக்காதீர்கள்.., அனைவருக்கும் வேலைக்கு, கல்லூரிக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்க தான் செய்யும், ஆனால் ஒரு உயிர் ஆபத்தில் இருக்கும் பொழுது.., காப்பாற்ற உதவுங்கள்..
Discussion about this post