காங்கிரசை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தான் வெளியேறினேன் என்று குளம் நபி ஆசாத் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத், அவர் சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பெறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரசில் இருந்து வெளியேற மோடி ஒரு காரணமாகக் கூறுவது சாக்குபோக்கு ஆகும். காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே கட்சிக்கும் எனக்கும் பிரச்னை இருந்தது. தலைமைக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ கேள்விகளை எழுப்புவதையோ எப்போதும் விரும்பவில்லை. பல காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெற்றன ஆனால் ஒரு முடிவு கூட எடுக்கவில்லை. காங்கிரசிலிருந்து வெளியேற என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள்.
மேலும் அவர் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும் இன்னும் பத்து நாள்களில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.