தீபாவளி முதல் சென்னையில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் தொடங்கவுள்ளதாகவும், வருகிற 2023 டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஜியோ தனது 5ஜி நெட்வொர்க் வரிசைப்படுத்துதலுக்காக ரூ.2 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது.
“ஜியோ 5G மூலம், நாங்கள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு இடத்தையும் மற்றும் எல்லாவற்றையும் மிக உயர்ந்த தரம் மற்றும் தரவுகளுடன் இணைப்போம். இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, உலகளாவிய சந்தைகளுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என ஜியோ நிறுவன தலைவர் அம்பானி தெரிவித்துள்ளார்.