197 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு மருத்துவமனை..! அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?
வேலூரில் 197 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட இருக்கும் அரசினர் பெண்ட்லேண்ட் மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் அடிக்கல்லை நாட்டினார். காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையின் ரூ.7 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை கடந்த 1882 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 1915 ஆம் கூடுதல் கட்டிடங்களை கட்டி பெரிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
அதன் பின்னர் இன்று ரூ.197 கோடி மதிப்பில் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின் காணொளி காட்சியில் மூலம் சென்னை தலைமை செயலகத்திலிருந்து அடிக்கல் நாட்டினார், இதன் மூலம் மருத்துவமனை அதி நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவுள்ளது.
இதன் பின்னர் வேலூரில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி மேயர் சுஜாதா மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.
இதே போன்று பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை ரூ.7 கோடி மதிப்பில் தமிழக முதல்வர் கட்டிடங்களை திறந்து வைத்ததை, அடுத்து அதனை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..