குற்றாவளிகள் இனி தப்ப முடியாது..! லாக்கப்பிற்கே இனி லாக்கா..?
சிறைகளில் ஆயிரக்கணக்கான கேமராக்களை கொண்டு கண்காணித்து குற்றங்கள் நடக்காமல் தடுப்பதை போல் தற்போது உள்ள அதி நவீன தொழில் நுட்பங்களையும் சிறையினும் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்.
சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி துவக்க விழாவில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் சந்திரசேகர் பயிற்சியை துவங்கி வைத்து பேச்சு
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 31 சிறைத்துறை அதிகாரிகளுக்கான ஐந்து நாட்கள் தொழில்நுட்பங்கள் பயன்பாடு மற்றும் இணைய வழி நிர்வாக மேலாண்மை மற்றும் இணைய வழி வணிகம் குறித்து பயிற்சியை சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் சந்திரசேகர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இதில் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் மதன் ராஜ்,கோபால்,ராமசேஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் சந்திரசேகர் பேசுகையில் அதி நவீன தகவல் தொழில் நுட்பங்கள் என்பது எல்லா துறைகளிலும் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக சிறைத்துறையிலும் தொழில் நுட்பங்கள் பயன்படுத்த படுகிறது தெலுங்கானாவில் ஆயிரக்கணக்கான கேமராக்களை சிறைகளில் பொருத்தி கைதிகளின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் இருந்த இடத்திலேயே அதிகாரிகள் அறிந்து கொள்கின்றனர்.
அதற்கு காரணம் தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் ஆர்வமும் தான் தற்போது மேலும் வளர்ந்து வரும் அனைத்து தொழில்நுட்பங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் குற்றங்களை நடக்காமல் இவைகள் மூலம் தடுக்கலாம் எனவும் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..