வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்…! எலான் மஸ்க் பதிவு..!
லோக்சபா தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது…. அதில் பாஜக கூட்டணியில் 240 இடங்களிலும் காங்கிரஸ் 233 இடங்களிலும் வெற்றி பெற்றது
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் எனவும் மனிதர்களால் அல்லது செய்யறிவால் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..