நாடு முழுவதும் ஸ்லீப்பர் செல்களின் தாக்குதல்? உளவுத்துறை எச்சரிக்கை..!
பெங்களூர் புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று மிக பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் அறங்கேரியது. 10க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்த இந்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதியான பர்ஹத்துல்லாக்கோரி தான் இந்த சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது. ஆனால் அதிகாரிகளால் அந்த தீவிரவாதியை கைது செய்ய முடியவில்லை.
இந்தநிலையில் பர்ஹத்துல்லாக்கோரி இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுதுறைக்கு தகவல் கிடைத்தது. அதாவது பர்ஹத்துல்லாக்கோரி இந்தியாவில் உள்ள இரயில்களின் மீதும் இந்து தலைவர்கள் மீதும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
தங்களது ஸ்லிப்பர் செல்களை பயன்படுத்தி தான் இந்த தாக்குதல்களை நடத்த பர்ஹத்துல்லாக்கோரி திட்டமிட்டு இருக்கிறாராம். இதுதொடர்பான இவரது வீடியோவை டெலிகிராம் செயலியில் அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
எனவே நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-பவானி கார்த்திக்