கஸ்தூரி மஞ்சள் வைத்து ஒரு மேஜிக்..!
மஞ்சளில் ஆரோக்கிய குணங்கள் மட்டுமல்ல பாக்ட்ரியா எதிர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால்.., வயதான தோற்றத்தை விரைவில் வரவிடாது. காட்டு மஞ்சள் என்று அழைக்கப்படும் “கஸ்தூரி” மஞ்சளின் சரும பயன்கள் பற்றி பார்க்கலாம்.
* உண்மையான கஸ்தூரி மஞ்சள் முகத்தில் சரும கறையை படிய விடாது.
* வாசனை தன்மை அதிகம் என்பதால் என்றும் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
* தொடர்ந்து கஸ்தூரி மஞ்சள் பூசி வந்தால் சரும பருக்களை வர விடாது.
* கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து, பன்னீர் குழைத்து முகத்தில் பூசி வந்தால் கருவளையம் வராமலும் தடுக்கும். மேலும் சருமத்தை என்றும் அழகாக வைத்திருக்கும்.
* முகத்தில் உள்ள சிறிய சிறிய முடிகளை நீக்கும் தன்மை கொண்டது.
* கரும்புள்ளி மற்றும் முகச்சுருக்கம் வராமல் தடுக்கிறது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.