அப்போ “தல”… இப்ப “ஏகே” அப்படின்னு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித்குமார், அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு அஜித்குமார் பைக்கிலேயே ஒரு உலகச் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரைக்கும் நடிப்பு, குடும்பம், ரேஸ், பைக் ரெய்டு என போய்க்கொண்டிருந்த அஜித், இப்போ புது தொழில் ஒன்றில் களமிறங்கியுள்ளார். ‘AK Motto Ride’ என்ற சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதாவது பைக் ரெய்டு மூலமாக ஊர் சுற்றிப் பார்க்க விரும்புவோர் இந்த நிறுவனத்தை அணுகினால், இந்தியாவில் எங்கெல்லாம் சுற்றுப்பார்க்கலாம், எப்படி செல்ல வேண்டும் போன்ற பயணத்திட்டங்களை வகுத்து கொடுப்பதோடு, கூடவே ஒரு தொழில்முறை வழிகாட்டியையும் இந்நிறுவனமும் அனுப்பிவைக்கும்.
இதுவரைக்கும் சினிமாவை தாண்டி எதையும் யோசிக்காமல் இருந்து வந்த அஜித், புதிய தொழிலில் களமிறங்கி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், சில விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. அஜித் என்று சொன்னாலே “தங்கமான மனுசர்ப்பா…. ரொம்ப அம்புள் அண்ட் போலைட் ஆன Person… எல்லாரையும் மதிக்கக்கூடியவரு… வலது கை கொடுக்கிறது இடது கைக்கு தெரியமா உதவி பண்றவருன்னு சொல்லி தான் கேள்விப்பட்டிருப்போம்…” ஆனா ஏகே ஆரம்பித்துள்ள இந்த புது பிசின்ஸ் அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை சிதைத்துவிடதாக அமையக்கூடாது என பலரும் சோசியல் மீடியாவில் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அதாவது பைக் டூர் என்பது பொதுவாக மேல் தட்டு வர்த்தகத்தினர் மேற்கொள்ளக்கூடியது. இதற்காக பயன்படுத்தப்படும் பைக்குள் பல லட்சங்களில் ஆரம்பித்து கோடிகளை தாண்டும். அப்படியிருக்கையில் அதில் இந்தியாவை சுற்றிப்பார்க்க கிளம்பினால் லட்சக்கணக்கில் செலவாகும். இதில் அஜித் ஆரம்பித்துள்ள நிறுவனம் மூலம் பயணத்தை திட்டமிட்டாலும், பெரும் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
இங்கு தான் சர்ச்சையே ஆரம்பிக்கிறது. அப்படியானால் அஜித்குமார் தொடங்கியுள்ள புது பிசினஸை, பணக்கார இளைஞர்கள் மட்டுமே என்ஜாய் செய்ய முடியும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
“கமல் ஹாசன் மாதிரி சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்யுங்கள் என சொல்லவில்லை… குறைந்தபட்சம் சூர்யா, கார்த்தி மாதிரி ஏதாவது அறக்கட்டளை ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவியிருக்கலாமே” என சோசியல் மீடியாவில் கேள்வி எழுந்துள்ளது. அப்படி அஜித் செய்திருந்தால் அது அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருந்திருக்கும். ஆனால் இப்படியொரு தொழிலை ஆரம்பிக்கும் அளவுக்கு அஜித்திற்கு பண நெருக்கடி வந்துவிட்டதா? என சில நெட்டிசன்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post