முகச்சுருக்கத்தை போக்க ஒரு மேஜிக்..! இதை ட்ரை பண்ணுங்க..!
முகசுருக்கும் மற்றும் முகப்பரு பற்றி நீங்கள் கவலை படுபவரா..? முகச்சுருக்கம் மற்றும் முகப்பரு போக வேண்டும் என்று.., பலவிதமான க்ரீம்கள் பயன் படுத்தியும்.., குறையவில்லையா. இனி கவலை வேண்டாம் உங்கள் முகப்பரு மற்றும் முகச்சுருக்கம் நீக்க ஒரு மேஜிக். ஒரு சில கிரீம் சிலரின் சருமத்திற்கு கெடுதல் விளைவிக்கும். ஆனால் இந்த குறிப்பு இயற்கையான பொருட்களால் தயார் செய்யப்படுவதால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாது.
தற்போது சீசனில் உள்ள பலாப்பழத்தின் கொட்டையினை பயன்படுத்தி நம் முகச்சுருக்கங்களை நீக்கலாம்.
இதில் புரத சத்து அதிகம் இருப்பதால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை – 2
பால் – 50 மி.லி
தேன் – 3 தேக்கரண்டி
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் 50 மி .லி பாலை எடுத்துக் கொள்ளவும்.
* பின் பாலில் பலா கொட்டையை தோல் நீக்கி ஊற வைக்க வேண்டும்.
* ஊற வைத்த பாதமுடன் தேன் சேர்த்து மிக்ஸியிஸ் அரைத்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன், முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் முகத்தை கழுவி கொள்ள வேண்டும்.
* பிறகு முகத்தை கழுவிய பின் பலாகொட்டை பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும்.
* சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முகம் கழுவிய பின் ஒரு காட்டன் துணியால் துடைக்க வேண்டும்.
* இதனை வாரத்திற்கு இரு முறை செய்தால் முகப்பொலிவு அதிகரிக்கும் மற்றும் முகத்தில் உள்ள முகச்சுருக்கங்கள் மறையும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post