3 மாத குழந்தை உயிரிழந்த சோகம்.. திருவள்ளூரில் பரபரப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் சுதம்நாயக் – கீதா. ஒடிசா மாநிலத்தை மாநிலத்தை சேர்ந்த இவர்களுக்கு 3மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கீதா தனது குழந்தைக்கு படுத்து கொண்டே தாய்ப்பால் கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு புரையேறி மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்ப்பட்டுள்ளது.
இதனை கண்ட கீதா உடனே குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக அவர்களது பெற்றோரிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
3 மாத ஆண் குழந்தை புரையேறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”