கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவர் இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், கொடநாடு சம்பவம் என்ன ஆயிற்று? தற்போது நாங்கள் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார்.
“ஜெயலலிதா சாதாரண நபர் அல்ல, முதலமைச்சராக இருந்தவர்; அவர் இருந்த கொடநாடு பங்களாவில் சம்பவம் நடந்தது வேதனைக்குரியது. குற்றவாளியை நிச்சயம் கண்டுபிடிப்போம்” என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொந்த இடமல்ல, தனியாருடையது; ஏதேதோ ரூபத்தில் மிரட்டி பார்க்கிறார்கள், எதுவும் நடக்காது. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வழக்கு தொடர உள்ளோம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post