மாற்று திறனாளிகளுக்கு ஒரு குட் நியூஸ்..? இனி நீங்களும் ஒரு லாங் டிரைவ் போலாம்…!!
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் பேருந்துகளில் மாற்று திறனாளிகளால் பயணம் செய்ய முடியாதவாரு இருக்கிறது.
இந்த நிலைமை இனி வரும் காலங்களில்.. கிடையாது.., இனி அனைத்து மாற்று திறனாளிகளும் சிரமம் படாமல் எளிதில் பயணம் செய்யலாம்..
கடந்த 2016ம் ஆண்டு மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் நடைமுறைக்கு வந்தது.. இந்த சட்டப்படி மாற்று திறனாளிகள் சிரமம்மின்றி பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால்.. அது தாமதம் ஆனதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..
அந்த வழக்கு அதன் பின் விசாரணைக்கு வந்தது 100 சதவிகித தாழ்தள பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொழில் நுட்பம் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது…
அதன்படி தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் சார்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..
அதில் 100 சதவீத தாழ்தள பேருந்துகள் இயக்குவது தொர்பான சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டது..
இந்நிலையில் சென்னை, கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் உள்ள பேருந்து பயணிகளில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பெறுநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது..
இந்த வகையான பேருந்துகளில் மற்ற பேருந்தை போல படிக்கட்டுக்கள் உயர்த்தி இல்லாமல் கீழே தாழ்த்தி இருக்கும்.. மாற்றுதிறனாலிகள் மற்றும் வயதானவர்கள் எளிதில் ஏறும் வகையில் அமைந்திருக்கும்.
இவர்களுக்கென்றே 352 பேருந்துகளை வாங்க பெறுநகர மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை மட்டுமின்றி கோவை மாநகர போக்குவரத்து கழகமும் இதுபோன்ற 100 பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது..
தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற 352 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1871 டீசல் பேருந்துக்களும், பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு 254 பேருந்துக்களும், மதுரை மற்றும் கோவைக்கு 251 பேருந்துகளும்.., விழுப்புரத்திற்கு 347 பேருந்துக்களும் சேலம் மற்றும் கும்பகோணத்திற்கு 33 பேருந்துகளும், திருநெல்வேலிக்கு 50 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..