என்னது எடப்பாடி பிரதமரா…? எனக்கு தலையே சுத்துது.. கலாய்க்கும் ஓபிஎஸ்..!!
எடப்பாடி பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு “அந்த வாரத்தையை கேட்டாலே எனக்கு தலையே சுற்றுகிறது” என ஓபிஎஸ்.. நக்கல் அடித்துள்ளார்..
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது பாண்டியர்களின் 222வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.
அந்த விழாவிற்கு 222 பால்குடங்கள் கோபுர வாசலில் இருந்து அவரது நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன..
அந்த நிகழ்ச்சியில் மருது பாண்டியர் வேடம் அணிந்து கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாரட் வண்டியில் செல்ல அதன் பின் பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி சென்றனர்.
அந்த விழாவில் திமுக சார்பில் ராமநாதபுரம் சார்பில் எம். எல்.ஏ காதர்பாட்ஷா, முத்து ராமலிங்கம், முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் கலந்து கொண்டனர்..
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பலர் மருது பாண்டியர்கள் உட்பட பல கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்..
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் எடப்பாடி பிரதமர் என்ற கேள்விக்கு உங்களின் கருத்து என்னவென்று கேட்டதற்கு.., ஓபிஎஸ் எனக்கு தலையே சுத்துது என நக்கலாக பதில் அளித்துள்ளார்..
Discussion about this post