“கோட்சேவுக்கு கொடி பிடித்தவர்களுக்கு ஏஜென்டாக மாறிய ஆளுநர் “
தூத்துக்குடியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ.., திருமணம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்..,
சென்னை கவர்னர் மாளிகை முன் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு மிகவும்.., கண்டிக்க தக்கது தமிழக கவர்னர் தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு கொடி பிடித்தவர் யார்…?
அதுபோன்ற இயக்கங்களுக்கு ஏஜென்டாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்..
எனவே கவர்னருக்கு சுதந்திர போராட்டத்தை பற்றியோ சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியோ கூறுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது, சாதி ரீதியான தேவையில்லாத சர்ச்சைகளை பாஜக கிளப்பி கொண்டு இருக்கிறது…
இந்தியா முழுவதும் பாஜக சாரத பிற கட்சிகளை ஆளும் மாநிலங்கள் அந்த அரசிற்கு எதிராக தான் ஆளுநரின் செயல் இருக்கிறது..
வருகிற தேர்தலில் இந்திய கூட்டணி அமோக வெற்றிபெரும் என துரை வைகோ கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..