பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு போதை இளைஞரால் நேர்ந்த கொடூரம்..!! பரபரப்பான கொடுங்கையூர்..!!
சென்னை கொடுங்கையூர் அருகே பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை கொடுங்கையூர் அடுத்த எழில் நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி., எம்கேபி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தினமும் அதே வழியாக பள்ளிக்கு சென்று வரும் நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக முல்லை நகர் வழியாக பள்ளிக்கு சென்றுள்ளார்.., அப்போது அவ்வழியாக போதையில் வந்த வாலிபர் ஒருவர், சிறுமியை வழிமறித்து ஆபாச வார்திகளால் பேசியுள்ளார்.., அப்போது சிறுமி அங்கி இருந்த தப்ப முயற்சிப்பதற்குள் சிறுமியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், சிறுமியை மீட்டு அந்த போதை வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கப்பட்டு வருகிறது..
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை போதை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..